Skip to main content

திருச்சி ஆவின்சேர்மன் பதவி;முதல்வர் எடப்பாடி நடத்திய பஞ்சாயத்து!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய சேர்மங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மாவட்டங்களாக இருந்த ஆவின் சேர்மன் பதவிக்கு 2 மாவட்டமாக பிரித்து பதவி வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் குழப்பத்திலும் இருந்த பிரிக்கப்பட்ட 14 சேர்மன் பதவிகள் உள்ளிட்ட கமிட்டியை கலைத்துவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மூலம், 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு (ஆவின்) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 Panchayat held by Edappadi, chief minister in Trichy


திருச்சி பொருத்தவரையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி பிப்ரவரி 27, வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 28, வேட்பாளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 29.வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மார்ச் 4 தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் மார்ச் 5 என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி ஆவின் சேர்மன் பதவிக்கு திருச்சி ,முசிறி ,மணப்பாறை ,துறையூர், பெரம்பலூர்,வேப்பந்தட்டை ,அரியலூர், ஜெயங்கொண்டம். ஒன்பது தொகுதிகளில் இருந்து 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிறார்கள்.

திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பதவி ஏற்று ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியை பொருத்தவரை முதல்வர் எடப்பாடியின் நிழல் என்கிற அதிகாரத்தோடு எந்தவித நடைமுறையும் பின்பற்றாமல் கடந்த ஆவின் சேர்மன் ஆனார் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் முதல்வர் பெயரை பயன்படுத்தி ஆவின் நிறுவனத்தில் ரிட்டையர்ட் ஆனவர்கள் பலன்களைப் பெற லஞ்சம் கேட்ட சர்ச்சை, ஆவினில் புதிதாக வேலைவாய்ப்புக்கு இலஞ்சம் புரளுகிறது, சினிமா கம்பெனி ஆரம்பித்ததும் அவர் பெயரைச் சொல்லி மிரட்டி படங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் பிரச்சனை அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் என யாரையும் மதிக்காமல் தனி அணியாக செயல்பட்டு திருச்சி அதிமுகவில் தனி அணி ராஜ்ஜியம் நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி போன்று சட்டை அணிவதும், அவர் தைக்கும் கடைகளிலே இவர் துணி தைப்பதும், எடப்பாடி போன்றே கை சட்டையை மடித்து விடுவதும், கையில் கலர் கலராய் கயிறு அணிவதும் அவர் பயன்படுத்தும் காரை போன்று இவர் பயன்படுத்துவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முதல்வரின் பிரதிநிதி என காரியங்களை சாதித்துக் கொள்கிறார் என உளவுத்துறை ஆட்சித் தலைமைக்கு விரிவான ரிப்போர்ட் அனுப்பியது.

அதே நேரத்தில் சமீபத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆவின் கார்த்திகேயன் மீது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

 

 Panchayat held by Edappadi, chief minister in Trichy

 

தற்போது மீண்டும் ஆவின் சேர்மன் பதவிக்கு கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தான் தற்போது கட்சியினரிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. திருச்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் மோதி வருகிறார்கள். இந்த நிலையில் ஆவின் கார்த்திகேயன் தவிர்த்து மணப்பாறை செல்வராஜ் உள்ளிட்ட பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் 26.02.2020 தஞ்சையில் வைத்தியலிங்கம் வீட்டு திருமணத்திற்கு வந்தவர் புதிதாக கட்டப்பட்டுவரும் முக்கொம்பு அணையை சுற்றி பார்த்தவர் திருச்சியில் இன்று மதியம் ஓய்வு எடுத்தார்.

இந்த ஓய்வு நேரத்தில் திருச்சியின் ஆவின் சேர்மன் யார் என்கிற பெரிய பஞ்சாயத்தே நடந்து இருக்கிறது. செல்போன் எல்லாம் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் மதியம் 2.30 மணிக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் பேச்சு வார்த்தை நடந்து உள்ளது. இதில் ஆவின் கார்த்திகேயனுக்கு ஆதரவாக மா.செ. ரத்தினவேல், அமைச்சர் வளர்மதி மற்றும் தாமரை ராஜேந்திரன் ஆகியோர் கார்த்திகேயனுக்கு மீண்டும் கொடுங்கள் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மா.செ. குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் ஆர்.டி.ஆர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவன் யாரையும் மதிப்பதில்லை உள்ளாட்சி தேர்தலில் பெரிய குழப்பம் வரும், கட்சியினர் எல்லோரும் குற்றம் சாட்டின பின்பு மீண்டும் அவனுக்கு பதவி கொடுத்தால் எப்படி அரசியல் செய்வது என்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

 

 Panchayat held by Edappadi, chief minister in Trichy

 

உடனே இடையில் குறுக்கீட்ட முதல்வர் எடப்பாடி அடுத்து மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் வருது. திமுக போட்டியிடும் பெரிய சவலாக இருக்கும். இந்த நேரத்தில் கோஷ்டி பூசல் இருந்தால் பெரிய பிரச்சனையாக இருக்கும். நான் கார்த்திகேயனை கூப்பிட்டு கண்டிக்கிறேன். இந்த ஒரு முறை விடுங்க அவரை வேட்பு மனு தாக்கல் செய்ய சொல்லுங்க என்று முதல் அனைவரையும் பஞ்சாயத்து செய்து அனுப்பியிருக்கிறார்.

எப்போதும் முதல்வர் எடப்பாடி திருச்சிக்கு வந்தால் கூடவே இருக்கும் ஆவின் கார்த்திகேயன் இன்று மிஸ்சிங்.  உடன் காணவில்லை. அதே நேரம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைச்சர் வளர்மதி தலைமையில் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தார்.

ஆவின் சேர்மன் பதவிக்கு வேட்புமனு கடைசிநாளில் கார்த்திகேயன் தாக்கல் செய்கிறார். மீண்டும் கார்த்திகேயன் ஆவின் சேர்மன் ஆவதற்கு கீரின் சிக்கல் கொடுத்து விட்டார் என்பதே இன்றைய பஞ்சாயத்தில் முடிவு என்கிறார்கள். கார்த்திக்கு மீண்டும் ஆவின் சேர்மன் பதவி கிடைப்பதால் ஏற்கனவே இருந்த கோஷ்டி பூசல் தீருமா , அல்லது தொடருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே ஆவின் சேர்மேனாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த அயிலை பழனியாண்டி இருந்தார். அதன் பிறகு மீண்டும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கே அந்தப் பதவியை கொடுக்க வேண்டும் என்று கட்சியினர் முடிவு செய்தபோது, முதல்வரின் சிபாரிசுடன் கார்த்திகேயன் சேர்மேன் ஆனார். இந்த நிலையில் ஆவின் சேர்மேன் பதவி கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வளர்மதியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் வளர்மதியோ, முத்தரையர் சமூகத்தில் தகுந்த நபர் யாரும் இல்லை என்று மீண்டும் கார்த்திகேயனை தேர்வு செய்தார். இதனால் அதிருப்தியடைந்த முத்தரையர் கூட்டமைப்பினர், அந்த கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தலைமையில், முத்தரையரை புறக்கணிக்க வேண்டாம் என்று அமைச்சர் வீட்டுக்கு சென்று மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்