Skip to main content

மூட்டையிலேயே முளைத்து வீணாகும் 'நெல்' - அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த அவலம்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

'Paddy' sprouting in vain and wasted

 

ராணிப்பேட்டையில் சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்திருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகிலுள்ள எஸ்.கொளத்தூர் பகுதியில்தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாக பல மாவட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் ராணிப்பேட்டை மாவட்டமும் ஒன்று. புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், நெல்லை, கொள்முதல் செய்வதற்காக அரக்கோணம், நெமிலி ஆகிய பகுதிகளில் இருந்து விவாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றனர். நிவர், புரெவி புயலுக்கு (சுமார் 20 நாட்களுக்கு) முன்னரே கொண்டு செல்லப்பட்ட நிலையில், நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. தற்பொழுது மூட்டையிலுள்ள நெற்கள் முளைத்து நிற்கின்றது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே, இந்த அவலம் நிகழ்ந்துள்ளாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்