Skip to main content

“எங்களை கேட்காமல் யாரும் முடிவு செய்ய முடியாது” - மார்க்கெட் வியாபாரிகள் கண்டனம்

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

No one can decide without asking us Market traders condemned

 

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் வரும் 10ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை (10.04.2021) முதல் தடை செய்யப்பட உள்ள சில்லறை வணிக மார்க்கெட், பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

 

மேலும், சில்லறை வணிகர்கள் கடை திறப்பதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவர அரசு அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு மார்க்கெட் வியாபரிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செல்வி என்ற பெண் கூறியதாவது, “இங்கு இருக்கிற 5000 வியாபரிகளை நம்பித்தான் அவர்களின் குடும்பத்தார்கள் என 20,000 நபர்கள் உள்ளனர். மேலும் இந்த வணிகர்கள், சிறு, குறு வியாபரிகள் குறித்த விஷயங்களை, குறிப்பிட்ட நான்கு நபர்கள் கூடி பேசி முடிவெடுப்பது மிகவும் கண்டனத்துக்குறியது.

 

No one can decide without asking us Market traders condemned

 

அவர்கள் எந்தவிதமான முடிவுகள் எடுத்தாலும் அனைத்து வியாரிகளின் சம்மதத்துடன் எடுக்க வேண்டும். முடிவுகளை மக்களாகிய நாங்கள்தான் எடுக்க வேண்டுமே தவிர, வேறு எவருக்கும் முழு உரிமை கிடையாது. எங்களை இங்கிருந்து வெளியேற்ற யாருக்கும் உரிமை இல்லை. மொத்த விற்பனை அங்காடி வணிகர்கள் செலுத்தும் வரிகளான பராமரிப்பு வரி, மின்சார கட்டணம், தண்ணீர் வரி, லைசன்ஸ் உரிமைக்கு கட்டணம் என அனைத்து வகையான வரிகளும் நாங்களும் செலுத்தி வருகிறோம். ஆதலால் எங்களுக்கும் முழு உரிமையை தர வேண்டும்” என தெரிவித்தார்.

 

மேலும், இதுகுறித்து வியாபரி ஒருவர் கூறியதாவது, “தமிழக அரசு எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகிற நிலையில் டாஸ்மாக்கிற்கு மட்டும் ஏன் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். எங்களை சில்லறை வியாபரிகள் என கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அனைத்து இடங்களுக்கும் காய்கறிகளை சப்ளை செய்கிறோம். அதை அரசு தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்