Skip to main content

'987 பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை'- மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் அறிவிப்பு!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

 'No Action on 987 Schools'- Directorate of Matriculation Notification!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக,18/07/2022 முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படாது என்ற தமிழ்நாடு மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனால் கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியது. மறுபுறம் மெட்ரிகுலேஷன் இயக்குநரகத்தின் அறிவிப்பை மீறி விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் இயக்குநரகத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசின் அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது பற்றி பதில் அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. விளக்கத்தை கேட்ட பின் இந்த 987 பள்ளிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 18 தேதி அறிவித்த விடுப்பை ஈடு செய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளிகளை இயக்குவோம் என விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகளின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த விளக்கத்தினை ஏற்று எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்