Skip to main content

நிர்மலாதேவி வழக்கில் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிக்கை!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
3 meme


அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகள் வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவர் மீது விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், கூடுதல் மற்றும் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிக்கையை, சிபிசிஐடி சார்பில் துணைக் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா இன்று தாக்கல் செய்தார். கடந்த ஜூலை 13-ஆம் தேதி, 1160 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது நாம் அறிந்ததே.

குற்றப்பத்திரிக்கையில் மூவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சாரத் தடுப்புச் சட்டம், தொழில்நுட்ப முறைகேடு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நான்கு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிர்மலாதேவியின் குரல் மாதிரி சோதனை அறிக்கையும், செல்போன் பேச்சு உள்ளிட்ட விசாரணை ஆவணங்களும் குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, மார்ச் 6-ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

சார்ந்த செய்திகள்