Skip to main content

தொலைக்காட்சி நிருபர் கொலை..! தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

 

News reporter moses case father Indictment

 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பதூர் தொகுதிக்குட்பட்ட பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானராஜ் ஏசுதாசின் மகன் மோசஸ், இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரு தனியார் (தமிழன்) டி.வி.யில் பகுதி நிருபராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில், நவம்பர் 8 ஆம் தேதி ஞாயற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில், தனது வீட்டின் அருகே நண்பர் ஒருவருடன் பேசிவிட்டு வீடு திரும்பும் போது, வழி மறித்த இரண்டு மர்ம நபர்கள் மோசஸஸை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

 

மோசஸஸின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவர் தந்தையும், தங்கையும் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் இருந்த மோசஸஸை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், மோசஸ் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தார். 

 

இதைக் கேட்டு அவரின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் தொடர்பாக அவர் கூறியது "என் மகன் நிருபராக வேண்டும் என்பது அவனது சிறுவயது கனவாக இருந்து வந்த நிலையில், ஒரு தனியார் டி.வியில் வேலை செய்து வந்தார். ஆர்வத்தில் அதிகப்படியான வேலை செய்து வந்தார். எதுக்கும் பயப்படாமல் தவறுகளைச் சுட்டிக்காட்டி செய்தி சேகரிப்பார்.

 

இந்த நிலையில், கடந்த சில காலமாக எங்கள் பகுதியில் கஞ்சா போதைக்கு சிறுவர்கள் பலர் அடிமையாகி வந்தனர். எனது மகன் சமீபத்தில் காவல்துறைக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக பல ரகசியத் தகவலும் கொடுத்துள்ளார். இது, அந்த கஞ்சா வியாபாரிக்கு சில போலீசார் மூலம் தெரியவர, அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகனான நவமணி, சமீபத்தில் கொலை மிரட்டலும் விடுதிருந்தாக தெரிகின்றது. கொலை சம்பவம் நடந்தபோது நான் அங்கே சென்றேன். அப்போது, 'நிருபராக இருந்தாலும் வெட்டுவேன்' என்று கூறியபடி அந்தக் கொலைகாரர்கள் தப்பிச் சென்றனர்” என்று தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்