Skip to main content

தண்ணீர் திறந்தவுடன் அவசர, அவசரமாக ஆறு, வாயக்கால்களை துடைக்கின்றனர்; முத்தரசன் சாடல்

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

"ஆறு மாதங்களாக எந்த பணியையும் தொடங்காமல் மெளனிகளாக இருந்துவிட்டு தண்ணீர் திறந்தவுடன் அவசரகதியில் தூர்வாருகிறோம் என்கிற பெயரில் வாய்க்கால்களை துடைத்து விட்டு கொள்ளையடித்து கொண்டிருக்கின்றனர் அதிகாரிகளும் அதிமுகவினர்,"  என்கிறார் முத்தரசன்.

 

c

 

வரும் 4, 5, 6 ஆம் தேதிகளில் விவசாய தொழிலாளர்கள் சங்க தேசிய பொதுக்குழு கூட்டம் நாகையில் நடைபெற இருக்கிறது. ஐந்தாம் தேதி வேலை உறுதியளிப்பு திட்ட மாநாடும் நடக்கிறது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பலரும் கலந்து கொள்கின்றனர். அதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தமிழகத்தின் நிலவரங்கள் குறித்துப்பேசினார், " காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது.

 

நடப்பாண்டில் தூர்வார கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணித்துறை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆறு மாதமாக எந்த பணியையும் தொடங்காமல் இருந்து விட்டு தண்ணீர் திறந்தவுடன் அவசர, அவசரமாக தூர்வாருகிறோம் என்கிற பெயரில் வாய்க்கால்களை துடைப்பான்களை கொண்டு துடைத்துவருகின்றனர். அதிமுகவினரும் அதிகாரிகளும்.

 

 மேட்டூர் அணை திறந்து ஒரு மாத காலமாகியும் திருவாரூர் நாகை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள், மணல்மேடு, உள்ளிட்ட எந்த பகுதிகளுக்கும் தண்ணீர் வரவில்லை விவசாயத்திற்கு கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இனியும் தாமதிக்காமல் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

 

அதேபோல் நிபந்தனையின்றி கூட்டுறவு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்த வேண்டும்." என்றார்.

சார்ந்த செய்திகள்