Skip to main content

அய்யங்குளத்தை திறந்து வைத்த அமைச்சர்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

nn

 

பக்தி நகரான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும், கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான குளங்கள் இருந்தன. இந்த குளங்களில் அதிகமான குளங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி கட்டடங்களாகி விட்டன. இப்போது வெகு சில குளங்களே உள்ளன. அதனை பாதுகாக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

திருவண்ணாமலை நகரில் உள்ள சில குளங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முடிவில் தெப்பம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அய்யங்குளமும் ஒன்று. இந்த குளத்தின் கரைகள், 32 படிக்கட்டுகளில் 10க்கும் மேற்பட்ட படிகள் உடைந்து, சிதிலமடைந்து பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இக்குளத்தில் அதிகளவு சேறு சேர்ந்து புதைகுழியாக மாறின. சில ஆண்டுகளுக்கு முன்பு மஹாளய அமாவாசையின் போது தர்ப்பணம் கொடுக்க பூஜை செய்ய சிவாச்சாரியார்கள், ஐயர்கள் குளத்தில் இறங்கிய போது ஐந்துக்கும் மேற்பட்டோர் மூழ்கி இறந்தனர்.

 

அப்போது முதல் அக்குளத்தை செப்பனிட்டு சீர் செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலுவிடம் அய்யர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணியை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

 

அதன்படி 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளமும், 360 அடி அகலமும் 32 அடி ஆழமும் கொண்ட குளத்தினை தூர்வாரி, சீரமைத்து, புனரமைக்கும் பணியினை அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் வேலு நடத்தும் தூய்மை அருணை இயக்கத்தின் சார்பில் செய்தார்.

 

nn

 

அந்த பணியினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது அந்த குளம், நகரத்தில் வாரந்தோறும் தூய்மை பணியில் ஈடுபடும் ஐநூறுக்கும் அதிகமான தூய்மை அருணை இயக்கத்தினர் வருகை தந்திருந்தனர். குளத்தின் மையத்தில் 4 கால் மண்டபம் உள்ளது. சிதிலமடைந்த அந்த மண்டபத்தினை சீர் செய்து அதில் நந்திசிலை அமைத்து தரவேண்டும் என அய்யர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அங்கே நந்தி சிலை வைக்கப்படும் என அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு. அதன்படி நந்தி சிலையும் வைக்கப்பட்டது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இறுதி நிகழ்வாக தெப்பம் விடும் உற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐயங்குளத்தில் கப்பல் உற்சவம் நடத்த வேண்டும் என்பதற்காக வேக வேகமாக பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் 25 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட ஐயங்குளத்தினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்