Skip to main content

செயல் அலுவலர்களை அழைத்து பேசிய அமைச்சர் வேலுமணி!!!

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
dindigul

 

முன்னாள் முதல்வராக ஜெ. இருந்தபோது தமிழகத்தில் உள்ள 55 தேர்வு நிலை பேரூராட்சிகளை அந்தஸ்து உயர்த்தி சிறப்பு நிலை பேரூராட்சிகாக கொண்டு வந்து சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில்தான் திண்டுக்கல், கோவை, சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் உள்ள சமயபுரம், சின்னாளபட்டி, வத்தலக்குண்டு திசையன்வலசு, வனங்குடி, தாளக்காடு, ஆலங்குளம், தருமத்தம்பட்டி, அன்னூர், சங்ககிரி, குளத்தூர், திருண்நீருமலை, திருபோரூர், மாங்காடு உள்பட சில மாவட்டங்களில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சிகளும் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தபட்டது. அப்படி இருந்தும் கூட  சிறப்பு நிலைக்குன்னு செயல் அலுவலர்கள் போடாததால் ஏற்கனவே  இருக்கக்கூடிய செயல் அலுவலர்கள் (EO) தான் பணிகளை பார்த்து வந்தனர்.


இதனால் பதவி மூப்பு அடிப்படையில் உள்ள செயல் அலுவலர்கள் பலர் எங்களை சிறப்பு நிலை பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களாக போடவேண்டும்  என கடந்த  இரண்டு வருடமாகவே உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியிடம்  சங்கம் மூலமாக கோரிக்கைகளையும் முன் வைத்து வந்தும்கூட தகுதி அடிப்படையில் உள்ள செயல் அலுவலர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கவில்லை இந்த நிலையில்தான் கடந்த 11ம்தேதி உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை முப்பதுக்கு மேற்பட்ட செயல் அலுவலர்கள் திடீரென தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்பொழுது அமைச்சர் வேலுமணியும் உங்களை தகுதி அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்க இயக்குனருக்கு பரிந்துரை செய்து ஜிஓ போட சொல்கிறேன் என்று உறுதி கூறி இருக்கிறாராம். அதைக்கண்டு சிறப்பு நிலை பேரூராட்சிக்கு போகப்போகும் சிறப்பு நிலை செயல் அலுவலர்கள் அனைவரும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்