Skip to main content

மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு புத்தகம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

திமுக ஆட்சிக்கு வந்ததும் மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, மாலை அணிவிப்பதற்கு பதிலாக புத்தகங்கள் வழங்குங்கள் என்பதே அந்த முடிவு. அதனை வெளிப்படையாகவும் அறிவித்தார். இதனை அடுத்து முதல்வரை சந்திப்பவர்கள் சால்வைகளுக்கு பதில் புத்தகங்கள் வழங்கினர். அதேபோல, முதல்வர் ஸ்டாலினும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் யாரை சந்தித்தாலும் அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்குவதை வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்.

 

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை அமைச்சர்களும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒன்றரை வருடத்தில் தன்னை சந்தித்த நபர்கள் தந்த புத்தகங்களை பாதுகாத்து வந்தார் தமிழக அரசின் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன். அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் பயனுள்ள புத்தகங்களாக இருந்தன. கிட்டதட்ட 5,191 புத்தகங்கள் சேர்ந்திருந்தன. அவைகளை சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்க முடிவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதனை நூலகங்களிடம் ஒப்படைத்தார். இந்த சேவையை கண்டு நூலகப் பணியாளர்கள் அமைச்சரை பாராட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்