திண்டுக்கல் மாநகரில் உள்ள கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா நடந்து வருகிறது.
இந்த கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்து தீச்சட்டி, பால்குடம் எடுப்பதும், முளைப்பாரி கொண்டு வருவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கோட்டை மாரியின் பத்தாம் திருவிழா நாளில் திண்டுக்கல் பொடிகார வெளாளர் அறக்கட்டளை ( அங்கு விலாஸ் ) சார்பில் கோட்டை மாரியம்மன் மின் அலங்கார ரதத்தில் முக்கிய ரத வீதிகளில் பவனி வந்த கோட்டை மாரியம்மனை அங்கங்கே பக்தர்கள் பெரும் திரளாக நின்று கோட்டை மாரியை தரிசித்தனர்.
இப்படி அங்குவிலாஸ் குடும்பத்தினர் சார்பில் வருடந்தோறும் மண்டகபடி நடப்பது வழக்கம். இந்த மண்டகப்படியில் மின் அலங்காரம் பல டிசைன்களில் செய்யப்பட்டு அதில் கோட்டை மாரியம்மன் பவனி வரும் கண் கொள்ளாக் காட்சியை பார்ப்பதற்காக மாவட்டத்திலுள்ள பட்டி தொட்டிகளில் இருக்கும் மக்கள் பல ஆண்டுகளாக இந்த அங்கு விலாஸ் மண்டகப்படி அன்று வந்து அலங்காரம் காட்சியை பார்த்து ரசித்து விட்டு போவார்கள். அந்த அளவுக்கு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் அங்குவிலாஸ் மண்டகப்படி முக்கிய பங்கு வகித்து வருகிறது.