Skip to main content

“வெள்ளை உடை தேவதைகளின்  நலனில் நாம் அக்கறை காட்டுவோம்” - அன்புமணி

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

Let us show concern for the welfare of the white-robed fairies says Anbumani

நம்மீது அக்கறை காட்டும்  வெள்ளை உடை தேவதைகளின்  நலனில் நாம் அக்கறை காட்டுவோம் என உலக செவிலியர் தினத்திற்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்னைக்கு அடுத்து அதிக சகிப்புத் தன்மையுடன்  அனைவர் மீதும் அன்பு காட்டும்  வெள்ளை உடை தேவதைகளான  செவிலியர்கள் அனைவருக்கும்  உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மனிதர்கள் கண்ணாடியைப் போல இருக்க வேண்டும். மற்றவர்கள் நமக்கு செய்யும் நன்மையை மட்டும்  பல மடங்காகத் திருப்பித் தரவேண்டும். ஆனால், அதை நாம் செய்வதில்லை. இந்தக் குறையை போக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை ’’ நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், செவிலியர்கள் மீது காட்டும் அக்கறை நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது (Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies)” என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது. எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் செவிலியர்கள் காட்டும் அன்பையும், அக்கறையையும் அவர்களின் வாழ்வாதாரங்களை  வளப்படுத்துவதில் காட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்