Skip to main content

கும்பகோணம் இரட்டைக் கொலை வழக்கில் நால்வர் கைது!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Kumbakonam lawyer incident 4 arrested

 

கும்பகோணம் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை விவகாரத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிளாரட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ். இவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தஞ்சை கிழக்கு வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.

 

வழக்கறிஞர் காமராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜவேலு என்பவருக்கும் இடையே நிலத்தைப் பிரிப்பது தொடர்பான விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாச்சியார் கோவிலில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த விசாரணையின் போது இரு தரப்புக்கும் இடையே காவல்துறையினருக்கு முன்பாகவே கடுமையான மோதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மோதலில் ராஜவேலுவின் கையில் கடுமையான காயமடைந்ததால் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். (இதனை நமது நக்கீரன் இணையத்தில் தகவல் கிடைத்தும் அலட்சியம் காட்டிய காவல்துறை ) எனச் செய்தி எழுதியிருந்தோம்.

 

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பகுதியில் காமராஜும் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேலுவும் பைக்கில் வந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் இருவரும் இறந்தனர். காமராஜுவின் உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று அவரவர் உறவினர்களிடம் இருவரது உடலும் ஒப்படைக்கப்பட்டன.

 

இந்த நிலையில் வழக்கில் தொடர்புடையதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஆனந்த் அவரது நண்பர்கள் கண்ணன், சசிகுமார், சம்பத் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தக் குற்றவழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை, நான்கு தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

 

Ad

 

"காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிந்தும் நாச்சியார்கோயில் காவல்துறையினர் அலட்சியம் காட்டியதால், இரண்டு உயிர் போய்விட்டது," என்கிறார்கள் குடந்தை வழக்கறிஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்