Skip to main content

கர்நாடக சிங்கமான கரூர் ஐபிஎஸ் அதிகாரி... பதவிவிலகலால் அதிர்ந்த மக்கள்

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

பெங்களூரில் குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பணியை ராஜினாமா செய்துவிட்டு சமூக செயற்பாட்டில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளதற்கு வரவேற்புகளும் ஒரு பக்கம் அப்பகுதி மக்கள் அவருக்கு பிரியாவிடையும் அளித்து வருகின்றனர்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

கரூர் சின்னதாராபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎஸ்சாக தேர்வாகி கர்நாடக கவல்த்துறையில் சேர்ந்து பெங்களூரில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். கர்காலா பகுதியில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர் உடுப்பி மற்றும் சிக்மகளுரிலும் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்தார்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

உடுப்பியில் இருந்துபோது அவரை பணிமாற்றம் செய்த அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர் என்றால் அவர் எப்படிப்பட்ட நேர்மையான காவல் அதிகாரி என புரியவரும், அந்த அளவுக்கு நேர்மையான அதிகாரியாகவும், குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் இருந்துள்ளார் அண்ணாமலை.

 

பணியாற்றிய இடங்களில் எல்லாம் குற்றங்களை ஒழித்து மக்கள் மனதில் இடம்பிடித்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மக்களின் நன்மதிப்பை பெற்றார். இதனால் அவரை கர்நாடகாவின் சிங்கம் என்று அன்புடன் அழைத்துவந்தனர்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

இந்நிலையில் காவல் பணியியல் இருந்து விலகி சமூக பணியில் ஈடுபட இருப்பதாக அவர் எடுத்துள்ள முடிவை வரவேற்றாலும் அவரை பிரிய விரும்பாத மக்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் அவருக்கு பிரியா விடை அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மானசரோவர் யாத்திரை சென்ற போது வாழ்வின் மாற்றத்தை உணர்ந்ததாக கூறியுள்ள அதிகாரி அண்ணாமலை என்னுடன் பணியாற்றிய மதுகர் ஷெட்டி என்பவரின் திடீர் மரணம் என் வாழக்கையை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என தனக்கு உணர்த்தியதாக தெரிவித்துள்ள அவர் தீர ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

Karur IPS Officer of the Karnataka ...

 

இந்நிலையில் அவர் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் செய்திகள் கசிந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தான் எந்த அரசியல் கட்சி தலைவர்களுடனும் தொடர்பில் இல்லை இன்னும்சில நாட்களின் என் முடிவு என்னவென்று தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

 

ஆனால் இவரின் பதவி விலகல் முடிவு கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பணிபுரிந்த பகுதியை சேர்ந்த பலரும் அவருக்கு நேரில் சென்று பிரியாவிடை அளித்து வருகிற நிலையில் அவர் செய்த உதவிகளை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்