ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 94 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை 94,000 பேர் பணி கிடைக்காமல் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கபெற்று பணிக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஐனவரி மாதம் அரசிடமிருந்து 2013 தேர்ச்சி பெற்றோருக்கு ஒரு வார காலத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது இன்று வரையிலும் செயல்வடிவம் பெறாமல் இருப்பதும், அதே வேளையில் தற்சமயம் 01:03:2018 அன்று புதியதாக ஆசிரியர் தகுதிதேர்வு நடத்தப்படும் என்று சொல்வது அவர்களுக்கு மிகுந்த அச்சத்தையும் மன உளைச்சலையும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் ஒட்டு மொத்த தேர்வர்களின் பணி நியமனம் குறித்த எதிர்பார்ப்பும் கேள்வி குறியாக உள்ளது.
தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காத சூழலில் மீண்டும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுத சொல்வது என்பது தவறான நிலைப்பாடாகும். அது மடடுமல்லாமல் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை மீண்டும் தேர்வு எழுத சொல்வது ஜனநாயக முறைக்கு எதிரானதாக உள்ளது.
எனவே அரசு அறிவித்தபடி2013ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து தற்சமய பணியிடங்களை வழங்கி இந்த அரசு 94,000 பேரின் வாழ்வாதாராத்தை காத்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.