Skip to main content

நாளை கலைஞர் நினைவிடம் திறப்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
kalaignar memorial opening tomorrow

கலைஞரின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக தொண்டர்களும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்