Skip to main content

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.

சார்ந்த செய்திகள்