Skip to main content

வஞ்சிக்கப்படும் பழங்குடி மக்கள் - சென்னையில் ஆர்பாட்டம். (படங்கள்)

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

script async='async' src='https://www.googletagservices.com/tag/js/gpt.js'>

 

“கடந்த 17ம் தேதி உத்திரபிரதேசம், சோன்பத்ரா பகுதியில் விவசாயம் செய்துகொண்டிருந்த பழங்குடி மக்கள்மீது யோக்யா தத் என்பவர் அடியாட்களோடு சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார், இதில் 10 பழங்குடி இனத்தவர் கொள்ளப்பட்டனர். இவ்வாறு, பழங்குடியினர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். மேலும், அவர்கள் வாழும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இன்று (31.07.2019) காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பழங்குடி மக்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

சார்ந்த செய்திகள்