Published on 22/08/2021 | Edited on 22/08/2021

மணப்பாறையயை அடுத்த வீரப்பூர் பகுதியில் சமீபத்தில் கோவிலுக்கு வந்தவர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் ஒரு காரின் கண்ணாடியை மர்ம நபர் உடைப்பதை பார்த்து அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் புங்கனூர் பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பதும், வீரப்பூர் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடியது அவர் தான் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.