சென்னையில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ரயில்வேத்துறை தனியார் மயமாக்கினால் அதானி, அம்பானிக்கு சென்றுவிடும். மானியம் ரத்தானால் ரயில் டிக்கெட் இருமடங்காக உயர்ந்துவிடும். ரயில்வே துறை தனியாருக்கு சென்றால் பல்வேறு பயன்கள் ரத்தாகும். ரயிலில் கொண்டு செல்லும் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்.
இதேபோல் பிரிட்டீஷ், அர்ஜென்டினாவில் செய்தார்கள். அங்குள்ள பொதுமக்களின் எதிர்ப்பினால், அங்குள்ள தனியார் நிறுவனங்கள் சரியாக பராமரிப்பு செய்யாத காரணத்தினால், அதிக கட்டணங்கள் வசூல் செய்ததால் அங்குள்ள அரசே அதனை திரும்ப எடுத்துக்கொண்டது.
அதனை புரிந்து கொள்ளாமல் பிரதமர் அறிவுரைப்படி ரயில்வேத்துறை அமைச்சர் செயல்படுகிறார். தனியார் மயம் என்று வந்துவிட்டால் ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் நாங்கள் மட்டுமல்ல பொதுமக்களும் தனியார் மயத்துக்கு எதிராக போராட வேண்டும் என்றார்.