Skip to main content

கனமழை எதிரொலி: எந்தெந்த ஊர்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Echo of heavy rain: In which towns are holidays for schools and colleges?

 

தமிழகத்தில் திருவாரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கான காவிரி நீர்வரத்துத் தொடர்ந்து, அதிகரித்து வரும் நிலையில் அடியில் இருந்து வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாகவும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், பாதுகாப்பாக இருக்கவும் சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது வரை மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.75 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 

 

கனமழை காரணமாக, கோவை மாவட்டம், வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு மூன்றாவது நாளாக இன்றும் (04/08/2022) விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். அதேபோல், தொடர் மழை காரணமாக, கொடைக்கானலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், சிறுமலை மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர் கனமழையால், தேனி மாவட்டத்தில் இன்று (04/08/2022) பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04/08/2022) விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அறிவித்துள்ளார். அதேபோல், கனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04/08/2022) ஒருநாள் விடுமுறை என்றும், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்