Skip to main content

கர்நாடகாவில் பலத்த மழை! ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடல்! 

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

Heavy rain in Karnataka! Srirangam Amma Mandapam is closed!

 

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பியதுடன், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே அதிகப்படியான நீர்வரத்து காரணமாக திருச்சி, முக்கொம்பு மேலணைக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து வரத் தொடங்கியது. இதனால் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை நேற்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், ஒலிபெருக்கி மூலம் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. படித்துறையில் இரண்டு கரைகளை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்தபடி சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம் வெளியூரில் இருந்து வந்த பொதுமக்களும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், புனிதநீராடி வழிபாடு செய்யும் முடியாமல் வாசலிலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்