Skip to main content

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் நிவாரணம் வழங்கிய தலைமையாசிரியர்..!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

Headmaster who provided relief to government school teachers and frontline staff ..!

 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமப் பகுதியில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இன்று கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. 

 

அதேபோல், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள செட்டிகுளம், பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம், குரூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் பணிபுரியும்  முன்களப் பணியாளர்களுக்கும் ஊராட்சி பணியாளர்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. 

 

இந்நிகழ்வில், 60க்கும் மேற்பட்டோர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கப்பட்டது. இதற்கு பள்ளித் தலைமையாசிரியர் நாகமணி தலைமை வகித்தார். மேலும், உதவி தலைமையாசிரியர் மணி, இராதாகிருஷ்ணன் செட்டிகுளம் ஒன்றிய குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு, முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   


 

சார்ந்த செய்திகள்