சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அருள் மருத்துவமனையில் பெண்கள் நல இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை மருத்துவர் அருள்மொழிச்செல்வன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பின்னர் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பெண்களிடம் இந்த மருத்துவ முகாமின் நோக்கங்கள் குறித்தும், பெண்கள் எவ்வாறு உடலின் முக்கிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்றால் பெண்களுக்கு உடல் அளவில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார்.
இந்த மருத்துவ முகாமில் பெண்களுக்கு ரத்த சோகை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய்நலம், மார்பக நல பரிசோதனை, எலும்பு தேய்மான பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் மருத்துவர்கள் பிருந்தா, பத்மினி, பவித்ரா, சந்தியா, மணிகண்ட ராஜா உள்ளிட்ட மருத்துவர்கள் ஒருங்கிணைந்து முகாமிற்கு வருகை தந்த பெண்களுக்கு பரிசோதனைகளை செய்து அதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். மருத்துவமனை செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேவையான உதவிகளையும் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் அனைத்து பெண்களுக்கும் பெண்கள் நல சிறப்பு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நவீன இயந்திர வசதிகளுடன் நடைபெறும் இதனை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அருள்மொழிச்செல்வன் தெரிவித்தார்.