சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் படர்ந்து இருக்கிறது. இந்நிலையில் 8 நாட்களாக அங்கு படர்ந்து இருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
எண்ணெய் கழிவுகள் கலந்துள்ள பகுதியில் ஆய்வுப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் என தனித்தனியாக ஆய்வு பணிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த எட்டு நாட்களாகியும் இன்னும் எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.
எண்ணெய் படர்ந்துள்ளதால் படகுகள், மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளது. 'ஆயில் கண்டைன்மெண்ட் பூம்' என்ற கருவி மூலம் எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காட்டுக்குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஏழு குழுக்களாக பிரிந்து தற்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.