Skip to main content

மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
fire accident in the electricity office

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே வாணியன்சத்திரம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் துணை மின்நிலையத்தில் இருந்துதான் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்று (25-05-24) இந்தத் துணை மின் நிலையத்தில் இருந்த மின்மாற்றியில் திடீரென பயங்கரமாகத் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால், உடனடியாக இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையத்தில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மின்மாற்றியில் தீ பற்றிய உடனே, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த மெத்தனால்; மதுவிலக்கு போலீசார் அதிரடி!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
incident of Private Warehouse in Vadaperumbakkam Village Tiruvallur Dt

கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் கள்ளத்தனமாக சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கிடங்கின் ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அதன் பூட்டை வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 1500 லிட்டர் மெத்தனால் ரசாயன கலவை கலன்களில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர்  அங்கிருந்த மெத்தனாலை பறிமுதல் செய்தனர்.

மேலும் அனுமதி இன்றி தடை செய்யப்பட்ட மெத்தனால் ரசாயன கலவையைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கௌதம், பரமசிவம், ராம்குமார், பென்சிலால் ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். அவர்களிடம், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வினியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவர் உடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

விஜய் உத்தரவை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்; தலைமைக்கு ஏற்பட்ட கோவம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 Vijay birthday function issue

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவை மீறி அவரது பிறந்தநாளை கொண்டாடிய போது சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு, தீ பற்றவைத்தவர்க்கும் கையில் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காவல்துறை அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றதால் தகவல் அறிந்த போலீசார் மண்டபத்தில் குவிந்ததால் பரபரப்பு. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள், சிறுவனின் சாகசம், அன்னதானம், கோயில் சிறப்பு அர்ச்சனை என பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்த நிலையில் சிறுவனின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது சிறுவன் கையில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஓடு உடைக்கும் சாகத்தை செய்தார். அப்பொழுது சிறுவனின் கையில் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்தை பார்த்ததும் தீ பற்றவைத்தவர் சிறுவனின் கையில் வைத்திருந்த தீயை அணைக்க முயன்றபோது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை மூடாமல் கையில் வைத்திருந்த நிலையில் கேனில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி எறிந்த சிறுவனின் கையில் ஊறியதும் தீ அதிகமாக பற்றி எரிய தொடங்கியது. சிறுவன் மீது பற்றி எறிந்த நிலையில் தீ பற்ற வைத்தவர் கை மீதும் தீ பற்றி எரிந்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. 

இதில் காயமடைந்த சிறுவனை அவரது பெற்றோர்கள் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.தமிழகத்தில் கள்ளச்சாராயம் விவகாரத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை மூலம் உத்தரவு இட்டார். 

கட்சியின் தலைவர் உத்தரவை மீறி சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈசிஆர் சரவணன் நடத்திய நிகழ்ச்சியில் சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.