Skip to main content

வெறி நாய்களால் பலியாகும் கால்நடைகள்! ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த விவசாயிகள்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Farmers petition to collector office

 

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பாகநத்தம் ஊராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயத்துடன் ஆடு வளர்ப்பு தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் ஆடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது வெறிநாய் மற்றும் தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஆடுகளைக் கடித்துக் கொன்றிருக்கிறது. அதனால், கால்நடைகள் மேய்ச்சலுக்குப் போக முடியாத நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.  


60க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறி நாய்கள் கடித்துள்ளதாகவும், எனவே தெரு நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது அவர்கள், கிராமத்திலுள்ள வெறிநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு வந்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்