Skip to main content

தனிநபர் சொத்து இல்லாத ஊர்க்கட்டுப்பாடு கொண்ட விசித்திர கிராமம்!

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
oor

 

இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும்  ஈ.சி.ஆர் சாலை உள்ள நரிப்பையூர் அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை செல்லும் வழியில்,சுமார் ஒன்றரை கிலோ மீட்டரில் உள்ளது மாணிக்கம் நகர். இங்கு கிராம கட்டுப்பாட்டுடன் இலவச இடம் தருகிறார்கள்.

 

இதுபற்றி ஊர் தலைவர் தவசியிடம் கேட்ட போது,  ‘’பல நூறு வருடங்கள் வரை நரிப்பையூரில் பூர்வகுடிகளாக இருந்த சாம்பவர்களாகிய ஆதிதிராவிடர்கள் நாங்கள். சுமார் 30 வருடங்களுக்கு முன் நரிப்பையூர் ஏரியாவில் நடந்த கலவரம். மற்றும் கால மாற்றத்தால் தனக்குரிய விவசாய விளை நிலங்கள், தொழில்கள், குடியிருப்புகளை இழந்த எங்க மக்கள் , எங்கள் குலதெய்வம் குடியிருக்கும் மாடசாமி, முனியசாமிக்கு பாத்தியப்பட்ட சுமார் 10 ஏக்கர் இடத்தில் குடியிருக்க வரும் போது பல்வேறு இடையூறுகள் .

 

ஆதிக்க சக்திகளிடம் இருந்த பூர்வீக இடத்தை அது சமயம் மீட்டுக் கொடுத்தவர் சாத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (வக்கீல்) என்பவர். அந்த நன்றிக்கடனுக்காகவே மாணிக்கம் நகர் என்று இன்று வரை அடையாளம் கூறப்படும் ஊரில் ....

 

மாணிக்கம் நகரில் ஊரின் பொதுச் சொத்தாக சுமார் 20 ஏக்கர் உள்ளது. ஊர் தலைவர் டிரஸ்ட் நிர்வாகியாவார்.

யாதொரு நபர் பெயரிலும் தனிப்பட்ட அசையா சொத்து கிடையாது.

தலா ஒரு குடும்பத்தினருக்கு 3 சென்ட் (1200 ச.அடி) இடம் தானமாக தரப்படும், அதில் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் வீடு கட்டிக் கொள்ளலாம். (தற் சமயம் 200 குடிகள் உள்ளன).

 

ஆண்டாண்டு காலம் குடியிருக்கலாம், தனிப்பட்ட வாடகை ஏதும் கிடையாது. ஊர் வரி. கோயில் வரி மட்டும் செலுத்த வேண்டும்.

சொத்தை அடமானம் வைக்கவோ, கிரயம் செய்யவோ குடியிருப்பவருக்கு உரிமையில்லை.. எந்த வீட்டு உரிமையாளருக்கும் அவர் வசிக்கும் வீட்டின் பட்டா கிடையாது.

அரசு நலத்திட்ட உதவி பெற ஊர்த்தலைவர் குடியிருப்பு சான்று தருவார் அதை வைத்து மின்சாரம் .ரேசன் கார்டு. ஆதார் அனைத்தும் பெற்று கொள்ள முடியும்..

மக்கள் தொகை பெருக்கத்திற்கு தகுந்தாற்போல் ஊரை ஒட்டி உள்ள இடங்களை ஊர்ப் பொதுச் சொத்தாக வாங்கி வைத்துக் கொண்டே வருகிறார்கள். வெளியில் இருந்து வந்து ஊர்க் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இடம் தருவோம் என்கிறார்கள்.

 

நிரந்தரமாக ஊரை விட்டு வெளியூர் சென்று செட்டில் ஆக முடிவெடுத்தால் இடத்தை ஊருக்கு திரும்ப ஒப்படைப்பு செய்ய வேண்டும்.

முக்கியமாக ஊர் மக்கள் பிடித்த அரசியல் கட்சியில் இருந்து கொள்ளலாம். ஆனால் ஊருக்குள் கட்சிக் கொடி ஊண்டவோ ,அரசியல் கூட்டம் நடத்தவோ கூடாது..

 

வெளி நபர்கள் .கம்பெனி நடத்த வேண்டுமளவு இடம் கொடுத்தும் உதவுகிறார்கள். உதாரனமாக ஒரு வெளி நபர் தும்புமில் வைக்க வேண்டுமளவு இடவசதி கொடுத்துள்ளார்கள். மாத வாடகை வாங்குவதில்லை. அவரிடமும் வருடம் ஒரு முறை ஊர் வரி. கோயில் வரி மட்டுமே ....

இது போல் நிறைய விசயங்கள் கிராமங்களில் நடந்து வருகிறது..

இது போன்ற கிராமங்களை சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்து இன்னும் சற்று உதவி செய்தால் சமூக பொருளாதார மாற்றம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயரும்’’ என்றார்.


 

சார்ந்த செய்திகள்