Skip to main content

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு... இ-பாஸ் நடைமுறை ரத்து!  

Published on 30/08/2020 | Edited on 30/08/2020
corona

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் பொதுமுடக்கம் அடுத்த மாதமும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்புகள் இன்று மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் செப்டம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதேபோல் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் முழு முடக்கம் ரத்து செய்யப்படுகிறது. இ-பாஸ்  நடைமுறையை ரத்து செய்யப்படுவதால் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இனிமேல் இ-பாஸ் வாங்க தேவையில்லை. அதேபோல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

ஏற்கனவே மத்திய அரசு செப்டம்பர் 7 தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்க அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், தேநீர் கடைகளில்  இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதி. மாவட்டத்திற்குள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.  

75 நபர்கள் மிகாமல் திரைப்பட படப்பிடிப்பு நடத்தலாம். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்குவதற்கான தடை தொடரும். அதேபோல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு தொடரும். பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளை இயக்க தடை தொடரும். திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. உணவகங்கள் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. மதம் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வரும் 1ஆம் தேதி முதல் பேருந்து சேவை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் வெளியில் செல்லும் போது பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்