Skip to main content

’போட்டியே தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் தான்...’- ஈரோடு அ.ம.மு.க. வேட்பாளர் தடாலடி

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காங்கேயம் வெங்குமணிமாறனும் ம.தி.மு.க. சார்பில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கணேசமூர்த்தியும் ஏற்கனவே வேட்பாளர்களாக மனு டாக்டர் செய்துவிட்டார்கள். தொடர்ந்து இன்று மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் சரவணகுமார் என்பவர் மனுதாக்கல் செய்தார். அடுத்து அ.ம.முக. ,வேட்பாளர் காங்கேயம் செந்தில்குமார் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். 

 

e

 

பின்னர் செந்தில்குமார் பேசும்போது,  "ஈரோடு தொகுதியில் போட்டி என்பது எங்களது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடும் கணேசமூர்த்தி தான் போட்டி. இந்த ஈரோடு தொகுதியில் அதிமுகவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. மேலும் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் ஜவுளி, விவசாயம் மிகவும் நசிந்து விட்டது. இதனால் இந்த தொகுதி மக்கள் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 


முதல்வர் எடப்பாடியின் ஆட்சி என்பது கொள்ளை கூடாரம் என்பதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் டெபாசிட் கூட பெற முடியாது.  காங்கேயத்தை தாண்டி அவர் யார் என்றே தெரியாது. உண்மையான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். தேர்தல் களத்தில் போட்டி என்பது எனக்கும் தி.மு.க. கணேசமூர்த்திக்கும் தான் " என்றார் தடாலடியாக .


 

சார்ந்த செய்திகள்