Skip to main content

டிக்.. டாக் செயலிக்கு தடை கோரி போராட்டம்

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
t

 

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் மனு கொடுக்க வந்த அருந்ததியர் இளைஞர் பேரவையினர் அதன்  ஒருங்கிணைப்பாளர் வடிவேலு தலைமையில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.  பிறகு மக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.   தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் டிக் டாக் செயலிக்கு  தடை விதிக்க வேண்டும்.

 

சமூக வலைத்தளங்களில் சீனா நாட்டைச் சேர்ந்த  பைட் டான்ஸ்  என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  டிக் பா டாக் செயலியில்  15 விநாடிகள் தங்களது கருத்தை படம்பிடித்து வெளியிட முடியும்.   இதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயன்படுத்தி தங்களது நடன அசைவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.  இதில் சில சமயங்களில் மாணவிகள் நடனம் ஆபாச முறையில் சித்தரிக்கப்பட்டு வருகிறது.  இதற்கு  எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆகவே  இந்த செயலி மூலம் இளம் தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். இந்தோனேசிய மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இந்த செயலிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபல் அமெரிக்காவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் இதனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரை காக்கும் வகையில் இந்திய அரசு  டிக் டாக்  செயலி மற்றும் மியூக்கலி ஆப் பை  தடை செய்ய வேண்டும்.

 

டிக் ... டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் அது மத்திய அரசு தான் முடிவெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்