Skip to main content

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கும் இரட்டை இலை சின்னம்? 

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

Double leaf for alliances!

 

நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

 

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்கள் தவிர மற்ற வார்டுகளிலும் கூட்டணி கட்சியினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் கட்சி, சமூக சமத்துவ படை, பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி என அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்