Skip to main content

 திமுகவின் மூத்த உறுப்பினர் ரங்கம்மாள்(103 வயது) ஸ்டாலினுடன் சந்திப்பு

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
sn

 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (21-09-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், தேவாளபுரம் கிராமத்தில் 1914-ம் ஆண்டு பிறந்த கழகத்தின் மிக மூத்த உறுப்பினர் ரங்கம்மாள்  நேரில் சந்தித்துப் பேசினார்.

 
கழகத் தலைவரை நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவலோடு வருகை தந்த 103 வயதான அவரிடம், கழகத் தலைவர் அவருடைய உடல்நலம் குறித்தும், கட்சிக்கு அவர் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

sara

 

 

சார்ந்த செய்திகள்