Skip to main content

சென்னையில் வரலாற்று வெற்றியை நோக்கி திமுக... சில இடங்களில் அதிமுக டெபாசிட் இழப்பு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

பரக

 

தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 103 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 259 இடங்களில் திமுகவும், 32 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

 

சென்னையை பொறுத்த வரையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி இதுவரை 15 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. 180க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதே நிலைமை நீடித்தால் சென்னை மாநகராட்சியில் திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக 59 வார்டில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார். 196 வார்டில் அதிமுக வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றிபெற்றுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்