Skip to main content

செல்போன் கடையில் புகுந்து உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக பிரமுகர் கைது!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
cell ss


திருவண்ணாமலையை அடுத்த தாணிப்பாடியில் செல்போன் கடையில் புகுந்து அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தாணிப்பாடி பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற தண்டாரம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ரகுபதி, அவரது நண்பர் கணேஷ் இருவரும் நோக்கியா 213 மாடல் செல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளனர். இதைத்தடொர்ந்து அந்த செல்போன் திரும்ப வாங்குவதில் கடை உரிமையாளருக்கும் செல்போனை கொடுத்த ரகுபதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கடந்த செப்.8 ஆம் தேதி இரவு ரகுபதியும், கணேஷூம் செல்போன் கடைக்கு மீண்டும் சென்று கடை உரிமையாளர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது கடையில் உள்ள ஊழியர் தங்களை பாதுகாத்துக்கொள்ள சேரை எடுத்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த முயன்றார். ஆனால் அந்த சேரை பறித்த ரகுபதி அதனை வைத்து மணிகண்டனை பலமாக தாக்கினர். மேலும், கடையையும் அடித்து உடைத்துள்ளனர்.

இதில், மணிவண்ணுக்கு தலையில் பலமாக அடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து மணிவண்ணன் தாணிப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணேஷ், ரகுபதி இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செப்.9 ஆம் தேதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த மாதம் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு தி.மு.க. நிர்வாகியான பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் இலவசமாக பிரியாணி வேண்டும் என கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கி சென்றனர். இதற்கிடையே, தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்போன் கடையில் அடிதடியில் ஈடுபட்டது திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்