Skip to main content

கட்சியே இல்லாத வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு! திமுக எம்.எல்.ஏ.வின் பிரச்சாரம்!!

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி களமிறங்கியிருக்கிறார். வேலுச்சாமி ஆதரித்து ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு வேட்பாளர் வேலுச்சாமியை அழைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

 

அப்போது  வாக்காள மக்கள் வேலுச்சாமிக்கும். சக்கரபாணிக்கும் மாலை, சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அப்போது விருப்பாட்சியில்  வாக்காள மக்களிடம்  பேசிய மேற்கு மாவட்டச் செயலாளரும்.சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணியோ....

 

mla

 

 

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கக்கூடிய தேர்தல். அதனால் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் ஐம்பது ரூபாய்க்கு இருந்த கேபிள் டிவி கட்டணம் 350 ரூபாயாக உயர்த்தி விட்டனர். அதுபோல் 350 ரூபாய் இருந்த கேஸ் விலை  ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டனர். அதுபோல் ஒரே நாள் இரவில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என  இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களையும் தவிக்க வைத்து விட்டார். அதுபோல் ஒவ்வொருத்தருக்கும் 15 லட்சம் ரூபாய் உங்களுடைய வங்கிக் கணக்கில் போடுகிறேன் என்று சொன்ன மோடி இதுவரை 15 ரூபாய் கூட போடவில்லை.

 

 

இப்படி மத்திய அரசும், மாநில அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த தேர்தல் மூலம் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியும் மக்களுக்காக தேர்தல் அறிக்கை மூலம் பல திட்டங்களையும், சலுகைகளையும் கூறியிருக்கிறார்கள். அதில் முக்கியமானது நம்ம பிள்ளைகள் இனிமேல் நீட் தேர்வு எழுதத் தேவையில்லை, நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். அதுபோல் கல்விக்கடன் பயிர்க்கடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் அதோடு வருடத்திற்கு தாய்மார்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் அதாவது மாதம் இரண்டு ஆயிரம்ரூபாய் உதவித் தொகை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் .

 

mla

 

100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்பட்டு 300 ரூபாயாக கூலி தர இருக்கிறார்கள். இப்படி பல சலுகைகள் வாக்காளமக்களாகிய உங்களுக்கு அறிவித்து இருக்கிறார்கள். அதுபோல் இப்பகுதியில் பல ஆயிரம் பேர்களுக்கு நான் கொடுத்து முதியோர் தொகையை நிறுத்திவிட்டார்கள். அந்த முதியோர் உதவி தொகை எல்லாம் மீண்டும் உங்களுக்கு வீடு தேடி கொடுக்கப்படும். 

 

 

அதற்காக தலைவர் தளபதி 60 வயதுக்கு மேற்பட்ட உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டம் கொண்டுவரப்போகிறார். அதனால் வரக்கூடிய தேர்தலில் வேட்பாளர் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். இந்த பகுதியில் போட்டி போடக்கூடிய  பாமக கட்சியே இல்லை, அப்படிப்பட்ட கட்சிக்கு நீங்கள் ஓட்டு போட்டால் அது வேஸ்டாக போய்விடும். அதனால் வெற்றி பெறும் வேட்பாளரான வேலுச்சாமிக்கு உங்கள் ஓட்டுகளை போட்டு பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

 

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, கண்ணன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்