Skip to main content

மகாமக குளத்தில் புண்ணியம் தேடவந்த அமைச்சருக்கு ஏமாற்றம் 

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
கும்

 

மூன்று நாள் ஆன்மீக பயனமாக கும்பகோணம்  பகுதிக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். 

 

 கும்பகோணம் வந்த மாஃபா பாண்டியராஜன்,  சுவாமிமலை முருகன் கோயில், சூரியனார்கோயில், பிளாஞ்சேரி பிரத்தியங்கராதேவி கோயில், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்கோயில், திருநாகேஸ்வரம் ராகு பகவான் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று  தரிசனம் செய்தார்.

 

kumbakonam

 

 கும்பகோணம் வழியாக பட்டீஸ்வரம் செல்லும் வழயில் மகாமக குளத்தின் கீழ்கரைக்கு வந்தார். அப்போது அபிமுகேஸ்வரர் கோயில் அருகே காரை நிறுத்திவிட்டு மகாமக குளத்தில் இறங்கி கால்களை கழுவி விட்டு,  தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்ள விரும்பினார். ஆனால் மகாமக குளத்தின் கீழ் கரை பகுதியில் இரும்பு கேட்டுகள் அனைத்தும் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அமைச்சர் குளத்துக்குள் இறங்க முடியாமல் குளக்கரையில் இருந்தவாறு குளத்தை பார்வையிட்டார்.

 

 அப்போது குளத்தின் உள்ளே இருந்து ஒருவர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அந்த தண்ணீரை தானும், அவரது மனைவியும் தலையில் தெளித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

 

மகாமக குளத்துக்கு வந்த தமிழக அமைச்சர் குளத்துக்குள் இறங்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பினார்.
 

சார்ந்த செய்திகள்