Skip to main content

தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நேத்தி கடன் செய்த பக்தர்கள்!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கொடைரோடு அருகே இருக்கும்  ஜெ.ஊத்துப்பட்டி கிராமம். இங்கு ஸ்ரீ மாலம்மாள் கோவில் மாசித்திருவிழா 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அது போல் 13 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா கொடியேற்றத்தில் தொடங்கி மூன்று  நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ மாலம்மாள், ஸ்ரீ சென்னப்பன், ஸ்ரீ கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றன.

 

​village presidents election issue


 



மூன்று நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் இறுதி நாளில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தலையில் தேங்காய் உடைத்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆண் பெண் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து பூசாரி நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார். மேலும் சாட்டையால் அடி வாங்கும் நேத்திகடன் நிகழ்வும் திருவிழாவில் நடைபெற்றது. இதில் பூசாரி பக்தர்களை சாட்டையால் அடித்து அவர்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார். இந்த வினோத திருவிழாவை காண இந்நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதிலிருந்தும் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு  அம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.

சார்ந்த செய்திகள்