Skip to main content

காவல் தெய்வத்திற்கு அடிக்கல் நாட்டிய வனத்துறைஅமைச்சர் சீனிவாசன்!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019
ss

 

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன்  திருக்கோவில் மற்றும் அபிராமி அம்மன் திருகோயிலுக்கு அடுத்தபடியாக செல்லாண்டியம்மன்   திருக்கோவில் பிரசித்த பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இக்கோயில் மாநகரின் மையப்பகுதியில் காவல் தெய்வமாக இருந்து வரும் செல்லாண்டியம்மன் திருக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் திண்ணையில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த செல்லாயிக்கு  கூரைக் கொட்டகை அமைத்து செல்லாண்டியம்மன் தெருவில் வசிக்கக்கூடிய மக்களும், நகர மக்களும், பல ஆண்டுகளாக  வணங்கிவந்தனர். அதன்பின் கடந்த 1991ஆம் ஆண்டு இக்கோயிலை புதிப்பித்து முதன் முதலில் கட்டிடத்தோடு ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் பரம்பரை அறங்காவலர்கள் மூலம் நடத்தப்பட்டது.  

 

sr

 

இந்த கும்பாபிஷேகத்துக்கு நக்கீரன் ஆசிரியர் மதிப்பிற்குரிய நக்கீரன் கோபால் அண்ணன்   கலந்து கொண்டு நன் கொடையும் வழங்கினார்.     அதன் பின் 12 வருடங்களுக்கு பிறகு கடந்த 2003ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடந்தது.  அதன் பின் தற்போது 16 வருடங்களுக்கு பிறகு  இந்த செல்லாண்டி அம்மன் திருக் கோவிலை கற்கோவிலுடன் ராஜகோபுரம் கட்ட திருப்பனி செய்ய  வேண்டும் என பரம்பரை அறங் காவலர்கள் மற்றும்  பொதுமக்களும் நகர முக்கிய பிரமுகர்களும் முடிவெடுத்ததன் பேரில்  கற்கோவில் கட்டுவதற்க்கான திருப்பனி செய்ய "சித்ரவான ஸ்தாபன" நிகழ்வு நடைபெற்றது.


      இந்த விழாவிற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தொழில்அதிபரும் ஜி.டி.என்.கலைக்கல்லூரி இயக்குனருமான ரெத்தினம், முன்னாள் மேயர் மருதராஜ்  ஆகியோர் செல்லாண்டி அம்மனை  வழிபட்டு யாக மூலம் வைக்கப்பட்டிருந்த புனித தண்ணீரை ஊற்றி பூபுஸ்பம் போட்டு கோவிலின் திருப்பணிக்கான மூலஸ்தானத்தில் கற்களை வைத்து திருப்பணிக்கான பணிகளை துவக்கி வைத்தனர்.  

 

s


    இந்த விழாவிற்கு அபிராமி அம்மன் கோவில் உதவி ஆணையர் சிவலிங்கம்,  செயல் அலுவலர் மகேஸ்வரி, கோவில் பூசாரி குரு மற்றும் சீனிவாசா புளூமெட்டல்ஸ் உரிமையாளர்களும் அமைச்சர் சீனிவாசனின் மகன்களான ராஜ்மோகன், வெங்கடேஷ், அர்பன்பேங் தலைவர் பிரேம் மற்றும் திருப்பணிக்குழு தலைவர் கருணாகரன், செயலாளர் சந்திரசேகரன் பிள்ளை, பரம்பரை பூசாரியும் பொருளாளருமான மாரிமுத்து மற்றும் தேனி ஆனந்தம் நடராஜன்,  சுரபி கல்வி  நிறுவனர் ஜோதிமுருகன், பி.எம்.எஸ் முருகேசன்,  ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன் மற்றும் திருப்பணிக்குழு பொறுப்பாளர்களான பத்திரம் எழுத்தாளர் களான செந்தில், செல்வா என்ற  செல்வி மற்றும் கண்ணன்., ஆறுமுகம், செந்தில்,  மாணிக்கம், அங்குராஜ், ராமமூர்த்தி‌, வேல்குமார்,  காளிதாஸ்,  கிருஷ்ணன் அழகர்சாமி, முருகன் உள்பட திருப்பணி குழு பொருப்பாளர்களுடன் பொது மக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்