Skip to main content

ஆத்தூர் தொகுதி முழுவதும் நிவாரணம் அளித்த திமுக நிர்வாகிகள்!

Published on 03/05/2020 | Edited on 03/05/2020
dindigul



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி தனது தொகுதியில் உள்ள ஆத்தூர் மற்றும் ரெட்டியார் சத்திரம் யூனியனில் இருக்கக்கூடிய 46 ஊராட்சி மன்ற தலைவர்களையும். பேரூராட்சி தலைவர்களையும் அழைத்து கரோனா தடுப்பு உபகரணங்களான முககவசம், கிருமிநாசினி, சோப்பு, கையுறை போன்ற பொருட்களை 20 லட்சத்துக்கு வாங்கி கொடுத்தார்.
 

அதை  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கினார்கள். அதுபோல் தொகுதியிலுள்ள ஒட்டுமொத்த துப்புரவு பணியாளர்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்களுடன் கரோனா பாதுகாப்பு உபகரணங்களையும் ஐ.  பெரியசாமி வழங்கினார்.
 

அதை தொடர்ந்துதான் தற்பொழுது கரோனாமூலம் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருவதைக் கண்டு தனது தொகுதியில் உள்ள ஆத்தூர் மற்றும் ரெட்டியார் சத்திரம் ஆகிய இரண்டு யூனியன் பகுதிகளில் வசிக்க கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் கட்சி பாகுபாடு பார்க்காமல் ஐந்து கிலோ அரிசியுடன் மளிகைப் பொருட்களையும் கொடுக்க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்,.
 

நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் வீடு வீடாகச் சென்று  ஐந்து கிலோ அரிசியுடன் மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை கொடுத்து வருகிறார்கள். இதுவரை இவர்களால் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்