Skip to main content

நாமக்கல், பெரம்பலூரில் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

namakkal

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,956 ஆக பதிவாகி, இன்று மீண்டும் ஒருநாள் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,60,229 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 187 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 189 என்று இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

 

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் இயங்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பால், மருந்துக் கடைகளைத் தவிர பிற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.  உணவு விடுதிகள், டீக்கடைகளில் மாலை 5 மணிக்கு மேல் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

அதேபோல் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள ஏழு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரும்பாவூர், லப்பை, குடிகாடு பேரூராட்சியில் பிரதான கடைவீதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி மருந்துகளைத் தவிர பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் திங்கட்கிழமை தோறும் பக்தர்களின்றி பூஜைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்