Skip to main content

வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று....

Published on 23/01/2022 | Edited on 23/01/2022

 

jkl

 

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. 

 

குறிப்பாக, முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தற்போது அடிக்கடி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான பாதிப்பு இருப்பதால் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்