இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய ஹாக்கி போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் 7 வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழக அரசு நடத்தி கொண்டிருக்கிற இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி பல்வேறு அணிகள் மோதும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளை அமைச்சர்கள் பலரும் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு 8.30 மணிக்கு தொடங்கி வைத்து போட்டியை கண்டுகளிக்க உள்ளார். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.