Skip to main content

மதுரை சிறையில் மோதல்... 9 கைதிகள் வெவ்வேறு சிறைக்கு மாற்றம்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

சிறையில் மோதல் மாற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

கடந்த மாதம் 23 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கும் சிறைத்துறை போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றது. உள்ளே பலவகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

 

Clash in madurai jail ... 9 prisoners shift to different jails

 

Clash in madurai jail ... 9 prisoners shift to different jails

 

அந்த மோதலின் போது கைதிகள் சிறையின் மதில்சுவர்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது நின்று கற்களை எறிந்தும், பிளேடால் உடலை கீறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையின் உள்ளே போதை வஸ்துக்கள், மொபைல் போன் போன்றவை பயன்படுத்தக்கூடாது என்கிற நிலையில்  அங்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதன் காரணமாக கைதிகளுக்கும் சிறைத்துறை போலீசாருக்கும்  இடையே இந்த மோதல் சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்பட்டது. 

 

 

இந்நிலையில் அந்த மோதலுக்கு காரணமான கைதிகளை கண்டறிந்து அவர்களை வெவ்வேறு சிறைகளுக்கு சிறைத்துறை மாற்றியுள்ளது. வினோத், அருண், கண்ணன், பவித்ரன் உட்பட 9 கைதிகள் திருச்சி, கோவை, வேலூர், கடலூர் சிறைகளுக்கு மாற்றட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்