Skip to main content

உயர்நீதிமன்ற தீர்ப்பு - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

chennai high court judgement dmk president mk stalin discussion

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும் பழைய நோட்டீஸில் சில குறைபாடுகள் உள்ளதால், சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு புதிய நோட்டீஸ் அனுப்பலாம். புதிதாக அனுப்பப்படும் நோட்டீஸுக்கு மனுதாரர்கள் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வருகிறார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், தி.மு.க. சட்டமன்ற கொறடா சக்ரபாணி, ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர். இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்