Skip to main content

27 மாவட்டங்களில் பேருந்து சேவை... 4 மாவட்டங்களில் கோயில்கள் திறப்பு!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
lk

 

தமிழ்நாட்டில் இன்று (28.06.2021) காலைமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊடரங்கு அமலாகியுள்ளது. அதன்படி விழுப்புரம், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வகை 3இல் உள்ள மாவட்டங்களையும் சேர்த்து 27 மாவட்டங்களிலும் கடைகள் இரவு 7 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வழிபாட்டுத் தளங்கள் திறக்கப்பட உள்ளன. 27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம். கடற்கரைகளில் நடைபயிற்சி செய்ய இந்த 27 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பதிவு பெற வேண்டும். மற்ற 27 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 11 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பதிவு பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்