உயர் நீதிமன்ற உத்தரவையும், போலீஸ் எச்சரிக்கையையும் மீறி, கோவை கல்லுாரி மாணவர்களால், இன்று 'பஸ் டே' கொண்டாடப்பட்டது.
'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டுதோறும் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே அடிதடி, வெட்டு, குத்து நடந்து வந்தது. இதனால், நகரின் சட்டம் - ஒழுங்கும், மக்களின் அமைதியும் பாதிக்கப்பட்டது. இதனால், 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறி, இந்த ஆண்டும், 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, கோவை கல்லுாரி மாணவர்கள் திட்டமிட்டு திருப்பூரில் இருந்து அவினாசி சாலை வழியை கோவை வரும் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் வண்ண காகிதங்கள் ஒட்டி மேலதாளங்களுடன், பஸ் கூரை மீது ஏறி நடனம் ஆடிபடி விமான நிலையம் தொடங்கி நவ இந்தியா கல்லூரி வளாகம் வரை மாணவர்களின் ஆட்டம் பாட்டம் பொதுமக்களை அச்சபட வைத்தது.
ஒட்டுனர் இடை இடையே பேருந்துவை நிறுத்தி மாணவர்களை இறங்க சொல்லியும் மாணவர்கள் உயிர் பயமற்று நடந்து கொண்ட விதம், போலீஸ்க்கே பயம் காட்டியது. மாணவர்களால், 'பஸ் டே' கொண்டாடப்பட்டது. உயர்நீதிமன்ற தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், 'பஸ் டே' கொண்டாடிய கல்லுாரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.