திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியதாக திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. 16 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில், அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரப்பட்ட நிலையில் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ரவீந்தர் வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இவை இந்த வழக்கு தொடர்புடையதா என தெரியவில்லை என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாயாரிப்பாளர் ரவீந்தருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் இரண்டு வாரங்களில் 5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நிபந்தனை விதித்து ஜாமீன் அளித்துள்ளார்.