Skip to main content

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு-முதலிடம் பிடித்த கார்த்திக்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Avaniyapuram Jallikattu Completion - Karthik first place

இன்று மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை இன்று (15-01-24) 7 மணிக்கு அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் ஒன்பது சுற்றுகள் நடைபெற்ற முடிந்த நிலையில் தற்போது பத்தாவது சுற்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற கார்த்திக் இந்த வருடம் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித் குமார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்,  9 காளைகளை அடக்கி முரளிதரன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தலைமை காவலர், சார்பு ஆய்வாளர் உட்பட 48 பேர் காயமடைந்துள்ளனர். 48 பேரில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் 19 பேர், காளை உரிமையாளர்கள் 25 பேர், பார்வையாளர்கள் இரண்டு பேர், காவலர்கள் இரண்டு பேர் என மொத்தம் 48 பேர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காயமடைந்துள்ளனர். மொத்தமாக 817 காளைகள் பங்கேற்றுள்ளது. விறுவிறுப்பாக 10  சுற்றுகள் நடைபெற்ற நிலையில் தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றது. அவனியாபுரத்தை சேர்ந்த ஜி.ஆர்.கார்த்தி என்பவரின் காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது

 

வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

சார்ந்த செய்திகள்