Skip to main content

தமிழகம் முழுவதும் இன்று ஆட்டோக்கள் ஓடாது!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
auto


மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

 

 

மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாமக, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன. லோடு ஆட்டோ, ஒர்க்‌ஷாப், டிரைவிங் ஸ்கூல் போன்ற மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

சார்ந்த செய்திகள்